உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துகின்றார்கள்.
வழமையாக ஒரு மாதத்திற்கான கட்டணம் செலுத்த தவறியதன் பின் சிவப்பு பட்டியல் வழங்கப்படும். சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
அதன்பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும். எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின்வெட்டு மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுகின்றனர்.
இதனால் 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-பில் முறையின் படி சிவப்பு கட்டணங்கள் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிலுவைத் தொகை அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment