ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றது பங்களாதேஷ் அணி - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 17 December 2023

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றது பங்களாதேஷ் அணி

 



டுபாயில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 



இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி மோதியது.



இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.



இந்நிலையில் பங்களாதேஷ் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி ஈட்டியுள்ளது.



 இந்த நிலையில், 283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக இளையோர் அணி 24.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here