இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானித்துக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி ஆலோசகர் பதவிக்காக ஜயசூரியவுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment