பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 6 December 2023

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!


மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது நேற்று (05) 08.30 மணிக்கு வட அகலாங்கு 15.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.30 E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்காக ஏறத்தாழ 615 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.


இத் தொகுதியானது வடக்குத் திசையில் நகர்ந்து நேற்று 02.30 மணியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


எனவே,“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியால் நாடு முழுவதும் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                              

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.


மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை.


கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்.


காலி - அடிக்கடி மழை பெய்யும்.


யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.


கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.


மன்னார் - பிரதானமாக சீரான வானிலை.

(ஆதிரா)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here