எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கைத் தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுமதி சேர் வரி(வற்) அதிகரிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு கைத் தொலைபேசிகளின் விலை உயரக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
வற் வரி அதிகரிப்புடன், இந்த நாட்களில் தொலைபேசிகளின் விலை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
18% ஆக வற் வரி அதிகரிக்கப்படும் போது, அதற்கேற்ப கைத் தொலைபேசியின் விலையும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, அதனுடனான இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக கைத் தொலைபேசிகளின் விலை கடுமையாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment