எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 2 December 2023

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 



மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.



சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வினை ஆராய்ந்து பார்க்கும் போது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க நேரிடும்.



எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த மாதம் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளது.



கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட விலை விபரங்களுக்கமைய, இந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3565 ரூபாயாக மாற்றமின்றி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here