அதிபர் ரணிலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதிபர் இறுதி முடிவொன்றை எடுத்தால் அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புத்தாண்டுக்கு (ஏப்ரல்) முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் ஒருமுறை உயர்வடைந்துள்ளமையும், ஆளும் கட்சியின் 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்ட குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அதிபருக்கு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளமையும் நாடாளுமன்ற தேர்தலை முற்கூட்டியே நடத்த மற்றொரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனவே, அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment