நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மேல் தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சப்ரகமுவ ,மத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
No comments:
Post a Comment