மிஹிந்தலையில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்ட போதிலும், மிஹிந்தலையின் புனிதத் தலமான ரஜமஹா விகாரையின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இன்று (11) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,
மிஹிந்தலையில் இருந்த 252 இராணுவத்தினரும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், அவர்கள் வெளியேறியமை நாட்டின் பாதுகாப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டார்.
252 இராணுவத்தினரும் திரும்பப் பெறப்பட்டதன் விளைவாக பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை பொலிஸாரினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது, மேலும் 30 க்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தில் உள்ளனர்.
மிஹிந்தலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இலங்கை பொலிஸாரின் பொறுப்பாகும். தேவைப்பட்டால் இராணுவம் அனுப்பப்படும் என்றார்.
No comments:
Post a Comment