கொழும்பு - நகரின் சில பகுதிகளில் நாளையதினம் 09 ஆம் திகதி 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நீர்வெட்டு நடைமுறை
கொழும்பு 11, 12, 13, 14 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதன்படி, நாளை(09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் 10 காலை 9 மணி வரை நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment