நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்ககை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
அந்த நடவடிக்கையின் விளைவாக, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment