மன்னார் - யாழ். பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 28 December 2023

மன்னார் - யாழ். பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி!




மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி  நாயாத்துவழி  பகுதியில்  நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன்  அதி வேகமாக பயணித்த  தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.


குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு   கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.


 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாடுகளின் மீது மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த தனியார் பேருந்து சாரதியின் கவனயீனமே   குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here