முறையாக மின்கட்டணம் செலுத்தாத 7 லட்சம் மின் நுகர்வோருக்கு இலங்கை மின்சார சபையினால் சிவப்பு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பலமுறை மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு மக்கள் மின்சார கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 லட்சம் மின் நுகர்வோர்கள் காணப்படுகின்றனர்.
அதில், 65 லட்சம் பேர் மட்டுமே திட்டமிட்டபடி கட்டணத்தை செலுத்தவில்லை மற்றும் மொத்த மின் நுகர்வோரில் 10% பேருக்கு இந்த சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மின்சார சபையினால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment