இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 2 December 2023

இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

 






இலங்கையைச் சேர்ந்த 07 பேர் படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் நேற்று 1 ஆம் திகதி  இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



மன்னாரைச் சேர்ந்த குறித்த 7 பேரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர்  அவர்களை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here