ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 5 December 2023

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 600 மில்லியன் டொலர்!

 




ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பின் இரண்டாவது தவணையை, சர்வதேச நாணய நிதியம் அறிவித்த பின்னர் இவ்வாறு இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



கடந்த 2022 ஆம் ஆண்டு வரலாறு காணாத குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதம் சுருங்கியுள்ளது.



எனினும் கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான நான்கு ஆண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் நாட்டின்; பொருளாதாரம் படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.



இந்த நிலையில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய முதல் மதிப்பாய்வு அடுத்த வாரம் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது



இதனையடுத்து, சர்வதேச நாணய நிதியம், இரண்டாவது தவணையாக சுமார் 334 மில்லியன் டொலர்கள் நிதியை சர்வதேச நாணய நிதியம் வெளியிடவுள்ளது.



இதனையடுத்து, ஆசிய அபிவிருத்தி வங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க வாய்ப்புள்ளது என வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர், நாட்டுப் பணிப்பாளர் தகாபுமி கடோனோ தெரிவித்துள்ளார்

.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here