இலங்கையில் பதிவு செய்யப்படாத அதிக கொள்ளளவு கொண்ட (450சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன்) மோட்டார் சைக்கிள்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை தயாரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பதிவு முறைக்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அடுத்த சில வாரங்களில் வழங்குமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள 5,000 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு தேவையான பரிந்துரைகளை குழுவிடம் வழங்குமாறும், அவர்களுக்கு தேவையான வரிகளை வசூலித்த பிறகு கடுமையான சட்ட நிபந்தனைகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment