சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் தீவிர புயலாக ஆந்திர மாநிலம் அருகே கரையைக் கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல்' வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
நேற்றைய தினம் தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து, முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புயல் நள்ளிரவு சென்னையை விட்டு விலகிச்சென்ற நிலையில், புயல் இன்று கரையைக் கடந்துள்ளது.
சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையைக் கடந்து தீவிர புயலாகக் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் கரையைக் கடந்த நிலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரையைக் கடந்த புயல் அடுத்த 2 மணி நேரத்தில் வலுவிழக்கும் எனவும், தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்துள்ளதுடன், புயல் தற்போது வலுவிழந்து ஆந்திர பகுதிகளில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment