4 மாத காலத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்று, பண்டிகைக் காலத்துக்குத் தேவையான 15 மில்லியன் முட்டைகள் இன்று (17) நாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகள் இன்று சதொச நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.
இம்மாத தொடக்கத்தில் ஒரு முட்டையின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருந்த நிலையில், இன்று சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
தற்போதுள்ள விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்திருந்தும், அது நடக்காத நிலையில் அடுத்த 4 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு தரப்பினருக்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகள் இன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சதொச நிறுவனத்திற்கு இன்று 10 மில்லியன் முட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment