அரச ஊழியர்களுக்கு புதிய வரிகள் இல்லை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 28 November 2023

அரச ஊழியர்களுக்கு புதிய வரிகள் இல்லை!


புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அரசாங்கம் ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வரவுசெலவுத் திட்டத்தில் இணைத்துள்ளது. கோட்பாட்டு ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை வினைத்திறனான நடைமுறைப்படுத்தலின் மூலம் சாத்தியமாக்க வேண்டும்.


நடைமுறைப்படுத்தல் என்பதே முக்கிய காரணி என்பதுடன், இந்த வார்த்தைகளை நடைமுறைச் சாத்தியமாக்கக் கூடிய நபர்களையே நாம் அங்கீகரிக்கின்றோம்.


ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுத்தாலும், இதனைப் பூர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பு அவசியமாகும்.




2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், அது நாட்டை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.


2024 வரவுசெலவுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது, இது தேசத்திற்கு சாதகமான பாதையை ஏற்படுத்துகிறது.


புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு அங்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here