கம்பஹா மாநாடு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 November 2023

கம்பஹா மாநாடு!

 


கடனில் இயங்கும் நாட்டை மக்கள் விரும்பவில்லை எனவும், அந்த நிலையை மாற்றுவதற்கு மவ்பிம ஜனதா கட்சியிடம் மூலோபாய வேலைத்திட்டம் ஒன்று உள்ளதாகவும் கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.


மவ்பிம ஜனதா கட்சியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் நேற்று (19) கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா சுமேத வித்தியாலய கேட்போர் கூடத்தில் பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மவ்பிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, கட்சியின் தலைவர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர,

“தீவிர அரசியலில் நுழைய எனக்கு எவ்வித நம்பிக்கையும் இருக்கவில்லை. 

ஆனால் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த யதார்த்தத்தில், இந்த நாட்டில் நிலவும் கடுமையான அரசியல் வெற்றிடத்தில். தீவிர அரசியலில் இணையுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

என் அன்பான நண்பர்கள் சொன்னார்கள். இந்த அவலத்தில் இறங்க வேண்டுமா? வேறு வழி இல்லையா என்று கேட்கிறார்கள்.

உண்மையைச் சொல்வதென்றால், எல்லா மாற்று முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் ஒரு திட்டத்துடன் வந்தோம்.

பழைய கொள்கை அறிக்கைகளின் அடிப்படையில் இல்லாமல். நாங்கள் மூலோபாய திட்டத்துடன் வந்துள்ளோம்.

இந்த சூழ்நிலையிலிருந்து மீளக்கூடிய ஒரு திட்டம். எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுக்கு பொதுநல அரசு வேண்டாம். கடனை நம்பி வாழாத நாடு வேண்டும். தன் மீது நம்பிக்கை உள்ள மக்கள் இணைந்துக் கொண்டுள்ளனர்.

இந்த நாட்டில் இருக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறி இங்குவர நினைக்கும் இளைஞர்களுக்கு, நாங்கள் தீர்வை வழங்குகிறோம்.

மகிழ்ச்சியை உணரும் நாட்டை உருவாக்குவோம்.

ஆதீரன் 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here