வவுனியா, வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக அமைந்துள்ள 7 வியாபார நிலையங்களில் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இத்தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சுமார் 50, 000 ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாகவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் CCTV கெமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆதீரன்
No comments:
Post a Comment