யாழ் மல்லாக பகுதியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 17 November 2023

யாழ் மல்லாக பகுதியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்!

தனது வர்த்தக நிலையத்தில்  பணியாற்றிய பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட வர்த்தக உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து நேற்று  16 ஆம் திகதி  மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

வழக்கினை விசாரித்த நீதவான் கடை உரிமையாளரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

(செய்தியாளர் ஆதிரன் )

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here