அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Ruturaj Gaikwad 58 ஓட்டங்களையும், Yashasvi Jaiswal 53 ஓட்டங்களையும், Ishan Kishan 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Nathan Ellis 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Marcus Stoinis அதிகபட்சமாக 45 ஓட்டங்களையும், Tim David 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Prasidh Krishna மற்றும் Ravi Bishnoi ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
No comments:
Post a Comment