பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்: விசாரணைகள் இன்று ஆரம்பம் ! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 24 November 2023

பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபர்: விசாரணைகள் இன்று ஆரம்பம் !

இலங்கையில் மதிய உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) விசேட அறிக்கையொன்றை முன்வைத்த போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக உண்ணுமாறு அதிபர் பணித்ததான செய்தி வெளியாகியது.


இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சர் மத்தியமாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து இது குறித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.


குறித்த பாடசாலையின் 11ம் தர மாணவர்கள் குழுவொன்று மதிய உணவை பொலித்தீனில் சுற்றப்பட்டு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஏனைய ஐந்து மாணவர்களும் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாகவும், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதன்படி, பஸ்பாவின் பிரதேச கல்விப் பணிப்பாளரினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



(செய்தியாளர் ஆதிரா)


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here