ஆலயமொன்றிலிருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 29 November 2023

ஆலயமொன்றிலிருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை!

 



யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று(28.11.2023) இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



குறித்த ஆலய பூசகர் இன்று(29.11.2023) காலை 7 மணி அளவில் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதே  திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.



இந்நிலையில் ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை திருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here