அரசாங்க தொழில் வாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு : மகிழ்ச்சியான அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 27 November 2023

அரசாங்க தொழில் வாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு : மகிழ்ச்சியான அறிவிப்பு!

 


எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனை தெரிவித்துள்ளார்.




வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்காக கிராம அலுவலர் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களம் நடத்தவுள்ளது.




இந்த பரீட்சை ஊடாக 2,238 கிராம சேவகர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.


ஆதீரன் 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here