இலங்கை தூதரகத்தால் சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் பண்டிகை
இத்தாலியிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் தீபாவளியை முன்னிட்டு விசேட கொண்டாட்டம் நடைபெற்றது.
மிலான் பகுதியிலுள்ள தூதரகத்தில் தூதுவர் டெலனி வீரகோன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வடக்கு இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்து சமயச் சம்பிரதாயங்களக்கு முன்னுரிமை அளித்து தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கையர்களினால் சிறப்பான முறையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்குள்ள தமிழ் மக்கள் தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
தீபங்களால் ஒளியேற்றப்பட்டிருந்த தூதரக அலுவலகத்தில் இந்து சமயப் பிரசாதங்கள், நடனங்கள், பாரம்பரிய பொங்கல், உணவு என்பனவும் தயார் செய்யப்பட்டிருந்தன.
இந்து கலாசார உடைகளை அணிந்து ஏராளமான இலங்கையர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்ற இலங்கையர்களுக்கு சைவ உணவு, பானங்கள் மற்றும் இரவு உணவும் வழங்கப்பட்டன.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment