இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment