இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனமொன்றுக்கு 1.3 பில்லியன் ரூபா பெறுமதியான வீண் தொகை ஒன்று செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்காய்வு தலைவரின் 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
முக்கிய பரிசோதனைகளில் தோல்வியடைந்த குறித்த உரமானது விவசாய பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2021/2022 பருவத்தில் 500,000 ஹெக்டேயர் பரப்பளவில் பயன்படுத்துவதற்காக, 96,000 மெட்ரிக் டொன் இயற்கை உரமானது இறக்குமதி முலம் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த இறக்குமதியானது 1999ஆம் ஆண்டு 35ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, கட்டாய தாவரச் சான்றிதழையும் இறக்குமதி அனுமதியையும் பெறாமல் நடந்துள்ளது.
இந்த உர இறக்குமதியானது சட்டதிட்டங்களை மீறி நடந்தேறியது மாத்திரமல்லாமல் குறித்த பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகளையும் வெகுவாக பாதித்துள்ளதோடு 1,383 மில்லியன் ரூபாய் நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்திட்டங்களை மீறியமையால் குறித்த இறக்குமதியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதீரன்
No comments:
Post a Comment