துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 18 November 2023

துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள்!

 


விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் துவாரகாவின் படத்தை உருவாக்கி அதனை மாவீரர் தினத்திற்கு வெளியிட்டு அவர் உயிருடன் இருக்கின்றார் என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 27ம் திகதி வெளியிடுவதற்காக காணொளி ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

இதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.   


(செய்தியாளர் ஆதிரா)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here