வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிய வசதிகள்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 29 November 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிய வசதிகள்!

 




வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்   www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.



வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் பதிவைப் புதுப்பித்தல், வேலைவாய்ப்பு வங்கியில் பதிவு செய்தல், புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அடையாளம் காணல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல், ஒன்லைன் அமைப்பு மூலம் புதிதாக புதுப்பிக்கப்பட்ட இணையதளம் தகவல் மற்றும் தேவையான பதிவுகளை வழங்குவதை எளிதாக்கியுள்ளது.



சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்கள் கிடைக்கின்றன.



இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ள பின்னணியில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here