பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று 27 ஆம் திகதி மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ். கே. வீரசிங்க தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆதீரன்
No comments:
Post a Comment