குவைத்தில் இருந்து 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 33 பெண்களும் 02 ஆண்களும் அடங்கும். மேலும் இந்த குழுவில் வேலை வழங்குபவர்களால் நாட்டில் தங்குவதற்கான விசாவை நீட்டிக்காத ஒரு குழுவும், கடவுச்சீட்டுகளை முதலாளிகளால் திருப்பி தராத மற்றொரு குழுவும் இருந்தனர்.
இலங்கை தூதரகம்
குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், உள்துறை அமைச்சகம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த குழுவினரை இலங்கைக்கு அனுப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், சில பணிப்பெண்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தொழில் வழங்கியவர்களில் சிலர் பொய்யாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சம்பள நிலுவை
மேலும் அந்த வழக்குகள் அனைத்திற்கும் இலங்கைத் தூதரகம் தேவையான சட்ட ஆதரவை வழங்கி அந்த வழக்குகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
மேலும், சில ஊழியர்களுக்கு இறுதிப் பலன்கள் மற்றும் சம்பள நிலுவைகளைப் பெற்றுக்கொடுக்க இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆதீரன்
No comments:
Post a Comment