காத்தான்குடியில்: போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 25 November 2023

காத்தான்குடியில்: போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

 



காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.



மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று 24ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஷகி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று மாலை குறித்த போதை பொருள் வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டன



இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.



இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here