யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் நபர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்றுமுன்தினம் 16 ஆம் திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார்.
இதன்போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டவேளை வேப்ப மரக் கிளை முறிந்து விழுந்த நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.மேலும் அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment