பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவரே நேற்றையதினம்(21.11.2023) இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர்கள் பலர் தன்மையும், தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக மாணவன் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மரக்கறி செய்கைக்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை தந்ததாகவும், இதை அறிந்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாகவும், இதன்பின்னர் மாணவன் வட்டவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment