கொழும்பு- கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று 27 ஆம் திகதி இரவு கல்கிசை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவரென கூறப்படுகிறது.
மேலும், சந்தேக நபரிடமிருந்து 30 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதீரன்
No comments:
Post a Comment