உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலத்சிங்கல - பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக வேகமாக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.
இவ்வாறு பயணித்த போது கீழ் நரகல பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment