அதிகாலையில் நேர்ந்த துயரம் - மண் மேடு சரிந்ததில் : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 22 November 2023

அதிகாலையில் நேர்ந்த துயரம் - மண் மேடு சரிந்ததில் : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு


பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.


அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த இடத்திற்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன நபரை கண்டுபிடிக்க மின்சார சபை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


அதற்கமைய, இன்று அதிகாலை காணாமல் போனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


எப்படியிருப்பினும் இந்த மண் மேடு சரிந்ததால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

(செய்தியாளர் ஆதிரா)


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here