யாழில் பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 November 2023

யாழில் பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள்!

 

இச்சம்பவம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 


குறித்த பெண் சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவேளை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.


வீதியில் யாரும் அற்றவேளை பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.


யாழில் வழிப்பறி கொள்ளைசம்பவம் அதிகரித்துள்ள நிலையில், நகை அணியாததற்காய் பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

(ஆதீரன்)

 (பொது மக்களுக்கு விழிப்புணர்வு)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here