இலங்கையில்: இன்றைய தினம் தங்கத்தின் நிலவரம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 29 November 2023

இலங்கையில்: இன்றைய தினம் தங்கத்தின் நிலவரம்!


 

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (29.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 674,404.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தங்க நிலவரம்

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,844 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,460 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,510 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,530 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164,250 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.


எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதீரன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here