மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று 17 ஆம் திகதி அந்நாட்டு தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் இலங்கை - மாலைத்தீவு ஜனாதிபதிகள் சந்தித்ததுடன் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
(செய்தியாளன் ஆதிரன்)
No comments:
Post a Comment