மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று 24 ஆம் திகதி மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நகரில் பகுதியில் இருந்தது மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆதீரன்
No comments:
Post a Comment