கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது காலி பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்பி மீண்டும் காலி நோக்கி செல்லும் போது கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் தியகம கல்பாத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரென தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பெந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதீரன்
No comments:
Post a Comment