அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த கெல்சி ஹேட்சர் என்ற 32 வயதான பெண்ணுக்கு 2 கர்ப்பப்பைகள் உள்ள அதிசயம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.
பிறப்பிலேயே அரிய கர்ப்பப்பைகள் கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
அதிசயமாக அவரது 2 கர்ப்பப்பைகளிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர்.
ஒவ்வொரு கர்ப்பப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்கக் கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment