(செய்தியாளர் ஆதீரன்)
யாழ்ப்பாணம் - காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று 20 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
அப்பகுதி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment