ஆஸ்திரியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக பயணத்தை மேற்கொள்ள இன்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 27 வயதான இருவரும் வடபகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதீரன்
No comments:
Post a Comment