பத்தாயிரம் ரூபாய் தொடர்பில் இணையத்தில் உலவும் போலித் தகவல்கள் ! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 23 November 2023

பத்தாயிரம் ரூபாய் தொடர்பில் இணையத்தில் உலவும் போலித் தகவல்கள் !




இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள் ஒன்று வெளியிடப்படவில்லை என இணையத்தில் உலவும் போலித் தகவல்களை வெளிப்படுத்தும் srilanka.factcrescendo.com இணையத்தளம்.



இணையத்தில் பரவி வரும் இந்த நாணயத்தாள் குறித்த தகவல் பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா தபாலகம், காகம் மற்றும் வண்ணத்துப்பூச்சி  போன்ற உருவப்படங்களை தாங்கியதாக இந்த பத்தாயிரம் ரூபாய் நாணயத் தாள் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


பத்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்களில் மத்திய வங்கி அறிவித்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே இவ்வாறான போலி தகவல்களை மக்கள் நம்பக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இணையத்தில் பிரசுரமாகியிருந்த ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று எடிட் செய்யப்பட்டு இந்த பத்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் பற்றிய தகவல் போலியாக வெளியிடப்பட்டுள்ளது என அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது. 


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here