குறித்த வேலைத்திட்டம் இன்று(20.11.2023) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நவகிரிக் கிராம மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளிற்கிணங்க இவ்வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன.
இவ்வீதி புனரமைப்பு வேலைத்திடங்களை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.
யுத்தத்தின் வடுக்களையும் வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு சிறந்த போக்குவரத்துக்கள் அமையும்மிடத்து தமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதற்கும் கல்வியில் சிறந்து விளங்கவும், எல்லைப் புறங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வலுவாவதற்கும் இப்பாதை அபிவிருத்திகள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளன என பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
(செய்தியாளர் ஆதீரன்)
No comments:
Post a Comment