முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்தரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இவ்வாறு சீரற்ற வானிலை நிலவக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment